Welcome to Jettamil

சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு! – விஜய்க்கு இசைஞானி இளையராஜா ஆதரவு..?

Share

சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு! – விஜய்க்கு இசைஞானி இளையராஜா ஆதரவு..?

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வரும் த.வெ.க தலைவர் விஜய்க்கு திரைத்துறையினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இசைஞானி இளையராஜா தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில், 1988-ல் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த ‘இது எங்கள் நீதி’ படத்தின் பாடலைப் பகிர்ந்துள்ளார்.

“சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு” என்ற அந்தப் பாடலின் வரிகள், தற்போது விஜய்யின் அரசியல் வருகைக்குப் பொருத்தமாக இருப்பதாகக் கூறி, விஜய் ரசிகர்கள் இதனை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் முழுநேர அரசியலில் இறங்கியுள்ள சூழலில், “நாடு காத்திருக்கு” என்ற வரிகள் கொண்ட பாடலை இளையராஜா பகிர்ந்திருப்பது வெறும் எதார்த்தமானது அல்ல, இது ஒரு மறைமுக ஆதரவு என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை