மூத்த தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி விபத்தில் காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகம்
தமிழ் சினிமாவில் 90-களில் பல முத்திரை பதித்த படங்களைத் தயாரித்த ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ அதிபர் ஆர்.பி. சவுத்ரி, தனது பூர்வீகமான ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்றிருந்தார்.
உதய்பூர் பகுதியில் பயணம் செய்தபோது, அவர் சென்ற வாகனம் எதிர்பாராத விதமாகப் பெரும் விபத்தில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் சற்றுமுன் உயிரிழந்தார்.
ஆர்.பி. சவுத்ரியின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு அவரது மகனும் நடிகருமான ஜீவா மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் நிலைகுலைந்து போயுள்ளனர்.
ரஜினிகாந்த், சூர்யா, விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்குத் திருப்புமுனை படங்களைத் தந்த ஒரு மாபெரும் தயாரிப்பாளரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது உடல் நாளை விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.





