Welcome to Jettamil

விஜய்க்கு ஏன் விசேட வாழ்த்து? – ஜனாதிபதி அநுர மீது ஐக்கிய தேசியக் கட்சி காட்டம்!

Share

விஜய்க்கு ஏன் விசேட வாழ்த்து? – ஜனாதிபதி அநுர மீது ஐக்கிய தேசியக் கட்சி காட்டம்!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஒரு நாட்டின் தலைவர், சக நாட்டுத் தலைவருக்கே வாழ்த்துச் செய்திகளை அனுப்ப வேண்டும் என்றும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு ஜனாதிபதி நேரடியாக வாழ்த்துச் சொல்வது ராஜதந்திர மரபுகளுக்கு எதிரானது என்றும் அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மற்றும் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் பதவியேற்றபோது ஜனாதிபதி ஏன் இதேபோன்ற வாழ்த்துக்களை அனுப்பவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

ஆனால், இலங்கையும் தமிழகமும் கொண்டுள்ள ஆழமான கலாசார மற்றும் வரலாற்றுப் பிணைப்பை முன்னிறுத்தியே இந்த வாழ்த்து பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source : IBC

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை