Welcome to Jettamil

வெனிசுலா அமெரிக்காவின் 51-வது மாநிலம்! – ட்ரம்ப்பின் வரைபடத்தால் வெடித்தது சர்ச்சை!

Share

வெனிசுலா அமெரிக்காவின் 51-வது மாநிலம்! – ட்ரம்ப்பின் வரைபடத்தால் வெடித்தது சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் ஒரு வரைபடத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் வெனிசுலா நாடு அமெரிக்காவின் 51-வது மாநிலமாகக் காட்டப்பட்டுள்ளதுடன், அதன் எல்லைக்குள் அமெரிக்கக் கொடியும் பொறிக்கப்பட்டுள்ளது.

சீனாவுடனான முக்கியமான உச்சிமாநாட்டிற்குச் சென்றுகொண்டிருக்கும் வேளையில், ட்ரம்ப் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

எண்ணெய் வளம் மிக்க வெனிசுலாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது குறித்துப் பரிசீலிப்பதாக அவர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இந்த வரைபடம் அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

முன்னாள் தலைவர் நிக்கோலஸ் மதுரோ பிடிபட்டதைத் தொடர்ந்து, இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ் இதற்குத் திட்டவட்டமான மறுப்பை வெளியிட்டுள்ளார்.

வெனிசுலா ஒருபோதும் அமெரிக்காவின் மாநிலமாக மாறாது எனத் தெரிவித்துள்ள அவர், அதே சமயம் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவின் சுரங்கம் மற்றும் எண்ணெய் துறைகளில் முதலீடு செய்ய அனுமதி அளித்துள்ளார்.

நாட்டில் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், தேர்தல் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு “என்றாவது ஒரு நாள் நடக்கும்” என அவர் மழுப்பலாகப் பதிலளித்துள்ளது வெனிசுலாவில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை அதிகப்படுத்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை