சீன மண்ணில் காலடி வைத்தார் அமெரிக்க ஜனாதிபதி! ட்ரம்ப்புக்குச் சிறப்பு வரவேற்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று புதன்கிழமை மாலை சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குச் சென்றடைந்தார்.
விமான நிலையத்தில் அவருக்குச் சீன துணை ஜனாதிபதி ஹான் ஸெங் மற்றும் மூத்த தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சுமார் 300 சீன இளைஞர்கள் மற்றும் இராணுவத்தினரின் அணிவகுப்புடன் ட்ரம்ப்புக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈரான் போர்ச் சூழல், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் மற்றும் தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வது போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படவுள்ளது.





