Welcome to Jettamil

ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும்! – முதல்வர் விஜய்க்கு பிரித்தானிய நாடாளுமன்றக் குழு கடிதம்!

Share

ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும்! – முதல்வர் விஜய்க்கு பிரித்தானிய நாடாளுமன்றக் குழு கடிதம்!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவோன் மெக்டோனா மற்றும் உமா குமரன் ஆகியோர் அனுப்பியுள்ள இந்தக் கடிதத்தில், ஈழத் தமிழர்களின் நியாயமான அரசியல் உரிமைகளுக்காகவும், அவர்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்கவும் தமிழக அரசாங்கத்துடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

விஜய்யின் ஆட்சியானது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், இலங்கை மற்றும் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கு மிக முக்கியமானது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ் சமூகம், தமிழ்நாட்டுடன் ஆழமான மற்றும் நீடித்த பிணைப்பைக் கொண்டுள்ளது.

இந்த ஆட்சிக்காலத்தில் ஜனநாயக விழுமியங்கள் வலுவாகக் கட்டியெழுப்பப்படும் என நம்புவதாக எம்.பி-க்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை