Welcome to Jettamil

நீலாங்கரையில் இருந்து போயஸ் கார்டனுக்கு மாறுகிறாரா விஜய்? பொதுமக்கள் நெரிசலைத் தவிர்க்க முதல்வரின் ‘மாஸ்டர்’ பிளான்!

Share

நீலாங்கரையில் இருந்து போயஸ் கார்டனுக்கு மாறுகிறாரா விஜய்? பொதுமக்கள் நெரிசலைத் தவிர்க்க முதல்வரின் ‘மாஸ்டர்’ பிளான்!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், தற்போது நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து தினமும் தலைமைச் செயலகத்திற்குப் பயணம் செய்கிறார்.

இதற்காகச் சுமார் 20 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் முதல்வர் கான்வாய் செல்வதால், ஈசிஆர் (ECR) சாலை மற்றும் அண்ணா சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாகச் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. மக்களின் இந்தப் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், கோட்டைக்கு மிக அருகிலேயே குடியேற விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில், தமிழக அரசியலின் மிக முக்கியப் பகுதியாகப் போயஸ் கார்டன் திகழ்ந்தது.

தற்போது அதே போயஸ் கார்டன் பகுதியில் உள்ள தனது புதிய வீட்டிற்கு விஜய் மாறப்போவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.

சட்டமன்றத்தில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றுள்ள நிலையில், நிர்வாக வசதிக்காகவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்த இடமாற்றம் அமையலாம் எனக் கூறப்படுகிறது.

இது உறுதியாகும் பட்சத்தில், போயஸ் கார்டன் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த அதிகார மையமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை