Welcome to Jettamil

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! பாதுகாப்பு கருதி கல்வி அமைச்சு அதிரடி!

Share

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! பாதுகாப்பு கருதி கல்வி அமைச்சு அதிரடி!

மத்திய வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை (15.05.2026) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களையும் பாடசாலைகளுக்கு அழைக்க வேண்டாம் என வலயக் கல்வி அலுவலகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மலையகப் பகுதிகளில் மண்சரிவு மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் நிலவுவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, நிலவி வரும் சீரற்ற வானிலையால் இதுவரை 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல மாவட்டங்களில் வெள்ள அபாயம் நீடிப்பதால், ஏனைய கல்வி வலயங்களிலும் அந்தந்த மாவட்டங்களின் நிலைமையைப் பொறுத்து விடுமுறை குறித்து முடிவெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கனமழை தொடரும் என்பதால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை