Welcome to Jettamil

வடக்கில் நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம்! மக்களுக்கு வெளியான முன்னெச்செரிக்கை

Share

வடக்கில் நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம்! மக்களுக்கு வெளியான முன்னெச்செரிக்கை

இலங்கைக்கு வடக்கு திசையில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பிரதேசம் படிப்படியாக நலிவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், இதன் தாக்கத்தின் காரணமாக வடக்கு, மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன் வானம் முகில் செறிந்து காணப்படும்.

இதேவேளை, அனுராதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், பொலனறுவை மாவட்டத்திலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், ஆபத்தான மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை