Welcome to Jettamil

சீனா வழங்கிய பரிசுப்பொருட்களை குப்பைக் கூடையில் வீசியெறிந்த ட்ரம்ப்

Share

சீனா வழங்கிய பரிசுப்பொருட்களை குப்பைக் கூடையில் வீசியெறிந்த ட்ரம்ப்

சீனாவிற்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்க அதிபரின் விசேட ஏர்போர்ஸ் விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக, டொனால்ட் ட்ரம்பும் அவரது குழுவினரும் அதிர்ச்சிகரமான காரியம் ஒன்றைச் செய்துள்ளனர்.

சீன அரசு தங்களுக்கு வழங்கிய நினைவுப் பரிசுகள், விசேட பிரதிநிதிகளுக்கான அடையாள அட்டைகள், விழா அனுமதி அட்டைகள் மற்றும் தற்காலிகப் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் என அனைத்தையும் விமான நிலையக் குப்பைத் தொட்டியிலேயே வீசி எறிந்துள்ளனர்.

சீனாவின் உளவு பார்க்கும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மீதான அச்சமே அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவுக்கு முக்கிய காரணமாகும்.

சீனாவில் இருந்து பெறப்பட்ட எந்தவொரு பொருளும் அதிபரின் ஏர்போர்ஸ் விமானத்திற்குள் அனுமதிக்கப்படக் கூடாது என்ற கடுமையான விதிமுறை உள்ளதாகப் பாதுகாப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

சிறிய நினைவுப் பரிசுகள் அல்லது போன்கள் மூலமாகக் கூட அமெரிக்க அதிகாரிகளின் ரகசியத் தரவுகள் திருடப்படலாம் அல்லது அவர்கள் கண்காணிக்கப்படலாம் என அமெரிக்கா கருதுகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு பீஜிங்கில் உள்ள பிரிட்டிஷ் தூதரக அதிகாரிக்கு வழங்கப்பட்ட தேயிலைப் பெட்டியில் உளவு பார்க்கும் கருவி கண்டறியப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை