Welcome to Jettamil

சென்னை அடையாறு ஆற்றில் குதித்துத் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! மீட்டது தீயணைப்புத் துறை!

Share

சென்னை அடையாறு ஆற்றில் குதித்துத் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! மீட்டது தீயணைப்புத் துறை!

தமிழ் சினிமாவில் ‘பிரம்மச்சாரிகள்’, ‘டபுள்ஸ்’, ‘நினைக்காத நாளில்லை’ உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் இன்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவரது உடலை மீட்டுள்ளனர்.

எதற்காக அவர் இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது குறித்துப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திரைப்பட விழாக்களிலும், பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் சிறு தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும், சினிமா தொழிலாளர்களுக்காகவும் எவ்வித ஒளிவுமறைவுமின்றி, சர்ச்சைகளைப் பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாகப் பேசி சோசியல் மீடியாக்களில் எப்போதும் வைரலாகும் ஒரு நபர் கே.ராஜன்.

எப்போதும் சுறுசுறுப்பாகக் காணப்படும் அவரது இந்தத் துயர முடிவு, ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தையும் நிலைகுலைய வைத்துள்ளது.

அவரது மறைவுக்குப் பல முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை