தீவிர சிகிச்சையளித்தும் நடிகர் முத்துக்காளையின் மனைவி உயிரிழப்பு! முதல்வர் விஜய்யின் முயற்சிகள் வீணானது!
தமிழ் சினிமாவில் தனது 18 வயதில் கராத்தே பிளாக் பெல்ட் பெற்று, ஸ்டண்ட் மாஸ்டராகவும், பின்னர் பல நூறு படங்களில் மாஸ் நகைச்சுவை நடிகராகவும் வலம் வருபவர் முத்துக்காளை.
இவரது மனைவி மாலதிக்குத் தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.
அதன் பின்னர் கடந்த 17 நாட்களாகத் தீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதற்கிடையே, “தன் மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்” எனத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு முத்துக்காளை சமூக வலைதளத்தில் உருக்கமான வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முத்துக்காளையின் வீடியோ வைரலான அடுத்த சில நிமிடங்களிலேயே, முதலமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் முத்துக்காளையை நேரில் சந்தித்து, தேவையான அனைத்து உயர்தர மருத்துவ உதவிகளையும் அரசுத் தரப்பில் இருந்து உடனடியாக வழங்கினர்.
முதலமைச்சரின் இந்த அதிரடி முயற்சியால் முத்துக்காளையின் மனைவிக்குத் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், துரதிர்ஷ்டவசமாக மாலதி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
முதல்வரின் தீவிர முயற்சிக்கு மத்தியிலும் இந்த உயிர் பிரிந்தது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





