கோவை சிறுமி கொடூர கொ*லை : தாய்க்கு தெரியாமலேயே எரிக்கப்பட்ட சிறுமியின் உடல்
கோவை சூளூர் பகுதியில் வசித்து வந்த 10 வயது சிறுமி ஒருவர், திடீரெனக் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொ*லை செய்யப்பட்டார்.
இச்சிறுமி அருகில் இருந்த குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த இருவரே இந்த அநாகரிகக் கொ*டூரத்தை அரங்கேற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில், “தனது மகளின் உடலைத் தனக்குத் தெரியாமலேயே அவசரமாக எரியூட்டி விட்டார்கள்” என்று சிறுமியின் தாய் ஊடகங்களுக்குப் பரபரப்புப் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து கண்ணீர் மல்கப் பேசியுள்ள அந்தத் தாய், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உடலைத் தனது கண்ணில் கூடக் காட்டவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தனக்குத் தெரியாமல் குழந்தையின் உடலை அவரது தந்தை வாங்கி, சொந்த ஊரான சேலத்திற்குத் தமக்கு முன்னரே கொண்டு சென்று எரியூட்டி விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மகளின் உடலை மருத்துவமனையிலிருந்து வாங்குவதற்குத் தான் எவ்விதக் கையெழுத்தும் இடவில்லை என்று கூறிய அவர், தன் மகளின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மைகளைக் கண்டறிந்து தங்களுக்கு முழுமையான நீதி வழங்க வேண்டும் என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.




