குருவின் அருளால் கோடீஸ்வர யோகம்! – தலைவிதி மாறப்போகும் அந்த 4 ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, வரும் ஜூன் 2ஆம் தேதி குரு பகவான் கடக ராசிக்குப் பெயர்ச்சியாகி, தொடர்ந்து ஜூன் 18ஆம் தேதி பூச நட்சத்திரத்திற்குள் நுழைகிறார்.
இந்த மாற்றத்தால் கன்னி ராசியினருக்கு நிதி ரீதியாகப் பெரும் லாபம் கிடைப்பதுடன், நீண்டகாலக் கடன்களும் வசூலாகித் தீரும். பணியிடத்தில் பதவி உயர்வும் பாராட்டும் வந்து சேரும்.
அதேபோல், குருவை லக்னத்தில் பெறும் கடக ராசியினருக்குப் புதிய பொறுப்புகளும், உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கி, எதிர்பாராத பண வரவால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி அரங்கேறும்.
அடுத்ததாக, குருவின் சொந்த ராசியான தனுசு ராசியினருக்கு இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மங்களகரமான பலன்களை அள்ளித்தரவுள்ளது. குடும்பத் தகராறுகள் நீங்கி மகிழ்ச்சி பிறப்பதுடன், வெளிநாட்டுப் பயணம் மற்றும் புதிய வீடு, சொத்து, வாகனம் வாங்கும் உன்னத யோகம் கைகூடி வரும்.
இறுதியாக, மீன ராசியினருக்கு குருவின் அருளால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவோடு நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். மேலும், நீண்டகாலமாகத் திருமணத் தடையால் தவித்த வரன்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும்.





