Welcome to Jettamil

ஹேமரத்ன தேரருக்கு டி.என்.ஏ பரிசோதனை! நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இரத்தக்கறை படிந்த ஆடைகள்!

Share

ஹேமரத்ன தேரருக்கு டி.என்.ஏ பரிசோதனை! நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இரத்தக்கறை படிந்த ஆடைகள்!

சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அஸ்கிரியை விகாரையின் அஸ்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சந்தேகநபரான தேரர் எதிர்வரும் ஜூன் 16ஆம் திகதி அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஆஜராகி தனது இரத்த மாதிரியை வழங்க வேண்டும் என நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சமர்ப்பித்த மேலதிக அறிக்கையை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் ஏற்கனவே டி.என்.ஏ பரிசோதனைக்காக அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்பப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி மறைத்து வைத்திருந்த இரத்தக்கறை படிந்ததாக சந்தேகிக்கப்படும் ஆடைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அந்த அறிவியல் பரிசோதனைகளில், குறித்த ஆடைகளில் இருந்து டி.என்.ஏ சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த டி.என்.ஏ சான்றுகளையும் ஹேமரத்ன தேரரின் இரத்த மாதிரியையும் ஒப்பிட்டு அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக காவல்துறை கோரிக்கை விடுத்தது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை தயாரிக்கப்பட்டதும் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அரசாங்க பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை