அனிருத்தின் ஆன்மீக பயணம்: திருவண்ணாமலை கோவிலில் வழிபாடு!
பிரபல இசையமைப்பாளர் அனிருத், தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
சினிமா பணிகளுக்கு மத்தியில் ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டுள்ள அனிருத், அவ்வப்போது கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது அருணாசலேஸ்வரர் கோயில் சென்ற அவர், அங்கு சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
அப்போது விஜய் டிவி பிரபலமான சக்தி அவரை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.







