Welcome to Jettamil

இரத்த சோகையை விரட்டியடிக்கும் இரும்புச்சத்து நிறைந்த உண்மையான உணவுகள் எவை?

Share

இரத்த சோகையை விரட்டியடிக்கும் இரும்புச்சத்து நிறைந்த உண்மையான உணவுகள் எவை?

உடலில் இரும்புச்சத்து குறையும் போது ஹீமோகுளோபின் அளவு சரிந்து, இரத்த உற்பத்தி பாதிக்கப்படுவதால் உடல் சோர்வு மற்றும் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதனைச் சரிசெய்யப் பலரும் கீரைகளையும் மாதுளம்பழங்களையும் தேடித் தேடி உண்கின்றனர்.

ஆனால், ஊட்டச்சத்து அறிவியலின்படி 100 கிராம் கீரையில் 2.5 மில்லிகிராம் இரும்புச்சத்து மட்டுமே உள்ளது. ஆனால், இந்தியாவில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் ‘அமராந்த்’ தானியத்தில் 3 முதல் 4 மில்லிகிராம் வரை இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

அதேபோல், 100 கிராம் மாதுளையில் வெறும் 0.3 மில்லிகிராம் இரும்புச்சத்து மட்டுமே இருக்கும் நிலையில், 100 கிராம் பிளாக்பெர்ரி பழங்களில் 1.2 முதல் 1.6 மில்லிகிராம் வரை, அதாவது மாதுளையை விட கிட்டத்தட்ட 4 மடங்கு அதிக இரும்புச்சத்து நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், உடல் வலிமைக்காகவும் இரும்புச்சத்துக்காகவும் நம்மில் பலர் ராகியைத் (கேழ்வரகு) தேர்ந்தெடுத்து உண்கிறோம்.

ஆனால், 100 கிராம் ராகியில் 3.9 முதல் 4.6 மில்லிகிராம் வரை மட்டுமே இரும்புச்சத்து உள்ளது. அதேநேரம், நமது பாரம்பரியச் சிறுதானியமான சாமை அரிசியில் (Little Millet) 9 முதல் 15 மில்லிகிராம் வரை மிக அதீத அளவில் இரும்புச்சத்து ஒளிந்துள்ளது.

எனினும், தாவர உணவுகளில் உள்ள இரும்புச்சத்தை (Non-Heme Iron) நமது உடல் எளிதில் உறிஞ்சுவதற்கு, வைட்டமின்-சி (Vitamin C) நிறைந்த எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற உணவுகளையும் இவற்றுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை