வளைகுடா போர்பதற்றத்தில் அதிரடி திருப்பம்! ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் பயணம்
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இன்று இரவு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்குப் பயணமாவதை ஈரான் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக உறுதி செய்துள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், இந்தத் திடீர் பயணம் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு குறித்து பாகிஸ்தான் தலைவர்களுடன் அவர் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவின் படி, அப்பாஸ் அராக்சி பாகிஸ்தானைத் தொடர்ந்து ஓமானின் மஸ்கட் மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோவிற்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஈரான் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் தற்போதைய போர் நிலவரங்கள் குறித்துத் தனது நட்பு நாடுகளுடன் கலந்தாலோசிப்பதே இந்தச் சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஏற்கனவே ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஈரானின் இந்தத் திடீர் இராஜதந்திர வியூகம் வளைகுடா போர் பதற்றத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.




