குவைத் வான்பரப்பு மீண்டும் திறப்பு! நாளை முதல் விமான சேவைகள் ஆரம்பம்
ஈரான் மீதான போர் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகக் கடந்த பெப்ரவரி மாதம் 28-ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த குவைத் வான்பரப்பு, நாளை ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இதன்படி, குவைத் எயார்வேஸ் (Kuwait Airways) தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆரம்பகட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வான்பாதை மூடப்பட்டிருந்த காலத்தில், குவைத் விமான நிலையப் பகுதிகள் பலமுறை தாக்குதலுக்கு உள்ளானதாகச் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, படிப்படியாக விமான சேவையை முழுமையாக மீட்டெடுப்பதற்கான திட்டத்தைக் குவைத் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரம் முன்னெடுத்துள்ளது.




