Welcome to Jettamil

திரையுலகில் பெரும் சோகம்! 30 வயதில் உயிரிழந்த பிரபல நடிகை திவ்யங்கா

Share

திரையுலகில் பெரும் சோகம்! 30 வயதில் உயிரிழந்த பிரபல நடிகை திவ்யங்கா

ஹரியான்வி இசை மற்றும் திரையுலகில் தனது நடனத் திறமையால் குறுகிய காலத்திலேயே பெரும் புகழ் பெற்றவர் நடிகை திவ்யங்கா சிரோஹி.

உத்தரபிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அவரை காசியாபாத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

30 வயதே ஆன ஒரு இளம் நடிகையின் இந்தத் திடீர் மறைவு ஒட்டுமொத்த வட இந்தியத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திவ்யங்காவின் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், இது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை