முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
மருத்துவ சிகிச்சை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவரை அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல அனுமதிக்குமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் பசில் ராஜபக்ச பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அவர் அனுமதியின்றி வெளிநாடு செல்வதைத் தடுத்து உச்ச நீதிமன்றம் அண்மையில் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.