இரு குடும்பங்களிற்கிடையில் வாள்வெட்டு – ஐவர் படுகாயம்
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இரு குடும்பத்தினருக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக மிளகாய் தூள் கொண்டு வீசப்பட்டு சரமாரியாக வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஐவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக இருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸாசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை கைது செய்துள்ளனர்.
மேலும் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து வாள், மிளகாய்த்தூள் என்பவன பொலிசாரால் மிட்கப்பட்டுள்ளதாகவும் இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.