Welcome to Jettamil

இலங்கைக்கு அதிதீவிர மழை எச்சரிக்கை! – 200 மி.மீ-ஐத் தாண்டும் கனமழை!

Share

இலங்கைக்கு அதிதீவிர மழை எச்சரிக்கை! – 200 மி.மீ-ஐத் தாண்டும் கனமழை!

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை மேலும் நீடிக்கவுள்ளது.

இன்று காலை வெளியிடப்பட்ட விசேட அறிக்கையின்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிகத் கடுமையான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, குருநாகல் மாவட்டங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடி மின்னலுடன் கூடிய மழையின் போது பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பாகத் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை