ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துக்கு முதல்வர் விஜய் மனப்பூர்வமான நன்றி தெரிவிப்பு
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதில், “இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம் மற்றும் வர்த்தக ரீதியாக ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளன” என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அண்டை நாட்டுத் தலைவரிடமிருந்து கிடைத்த இந்த வாழ்த்து, தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியின் வாழ்த்துக்குத் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ள முதலமைச்சர் விஜய், “கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன்.
உங்களது அன்பான இந்தச் செயலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” எனப் பதிவிட்டுள்ளார். பதவியேற்ற சில நாட்களிலேயே, சர்வதேசத் தலைவர்களுடன் இணக்கமான உறவை விஜய் வெளிப்படுத்தியிருப்பது, அவரது முதிர்ச்சியான அரசியலைக் காட்டுவதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.





