விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! – தமிழக மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் அதிரடி கடிதம்!
“என் நெஞ்சில் குடியிருக்கும் சொந்தங்களே” எனத் தொடங்கும் அக்கடிதத்தில், தனது அரசியல் எதிரிகளான திமுக மற்றும் பாஜக-வை விஜய் கடுமையாகச் சாடியுள்ளார்.
மக்கள் விரோத தீயசக்தி திமுக என்றும், பிளவுவாத சக்தி பாஜக என்றும் குறிப்பிட்டுள்ள அவர், எவ்வித அதிகார மிரட்டல்களுக்கும் த.வெ.க அடிபணியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
“ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்க முடியாது, அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்ட முடியாது” என அவர் ஆவேசமாகத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மற்றும் பாசிச சக்திகளை வீழ்த்த மக்கள் அனைவரும் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
“அடைமழையாகப் பணமழை பொழிந்தாலும், வரும் ஏப்ரல் 23-ஆம் திகதி அன்று குடும்பம் குடும்பமாகச் சென்று விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊழல் சூதாடிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, நேர்மையின் நெருப்புக்கோளமான த.வெ.க-வை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும், வெற்றி நிச்சயம், வரலாறு படைப்போம் என்றும் அவர் தனது கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
— TVK Vijay (@TVKVijayHQ) April 21, 2026
ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம்.
எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே…





