Welcome to Jettamil

இலங்கையில் சர்வதேச சமாதான நடைபயணம்! வியட்நாமிய பஞ்ஞாகர தேரர் நாயுடன் வருகை

Share

இலங்கையில் சர்வதேச சமாதான நடைபயணம்! வியட்நாமிய பஞ்ஞாகர தேரர் நாயுடன் வருகை

வியட்நாமின் வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான ஏழு பௌத்த தேரர்கள், சர்வதேச சமாதான நடைபயணத்திற்காக இன்று காலை இலங்கையை வந்தடைந்தனர்.

இக்குழுவினருடன் ‘ஆலோகா’ (Aloka) என்ற நாயும் பாதுகாப்பிற்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட புனித அரசமரக் கன்றுடன், இன்று முதல் எதிர்வரும் 28-ஆம் திகதி வரை இந்த நடைபயணம் அரச அனுசரணையுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி செயலகம், புத்தசாசன அமைச்சு, முப்படைகள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் முழுமையான ஆதரவுடன் இந்தச் சமாதான நடைபயணம் நடைபெறவுள்ளது.

இலங்கையின் பௌத்த மரபுகள், பாரம்பரிய கைவினைக்கலைகள் மற்றும் கலை அம்சங்களை மக்களிடையே கொண்டு செல்வதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

‘Clean Sri Lanka’ திட்டமும் இதில் கைகோர்த்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இக்குழுவினர் சமாதான செய்தியைப் பரப்பவுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை