Welcome to Jettamil

இளைஞனின் உயிரைப் பறித்த சிக்கன் கறி! ஆளில்லா கட்டிடத்தில் நேர்ந்த விபரீதம்

Share

இளைஞனின் உயிரைப் பறித்த சிக்கன் கறி! ஆளில்லா கட்டிடத்தில் நேர்ந்த விபரீதம்

கர்நாடக மாநிலம் சிவமொக்கா கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவன், நேற்று முன்தினம் தனது நண்பனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

விழா முடிந்த பிறகு பரிமாறப்பட்ட சிக்கன் கறியை எடுத்துக் கொண்டு, மது குடிப்பதற்காக அருகில் உள்ள ஆளில்லா புதிய கட்டிடத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு மது அருந்திக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகச் சிக்கன் எலும்பு இளைஞனின் தொண்டையில் சிக்கியுள்ளது. மதுபோதையில் இருந்ததால் அவரால் அதைக் கையாள முடியாமல் மூச்சுவிடத் திணறியுள்ளார்.

குறித்த கட்டிடம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்ததால், இளைஞனின் அபயக் குரல் யாருக்கும் கேட்கவில்லை. இதனால் அவர் அங்கேயே மூச்சுத்திணறிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

மறுநாள் காலை வேலைக்கு வந்த கட்டிடத் தொழிலாளர்கள் இளைஞனின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்குத் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை