எதுவும் தெரியாது! – விஜய் அரசியல் பற்றி மம்மூட்டியின் பதில்! – குழப்பத்தில் ரசிகர்கள்
தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலைத் தனித்துப் போட்டியிட்டுச் சந்தித்துள்ள நடிகர் விஜய், சமீபகாலமாகப் பல்வேறு அரசியல் சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.
அவரது ‘ஜனநாயகன்’ படம் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல்களின் போது பல முன்னணி நடிகர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தனிப்பட்ட வேலை நிமித்தமாகச் சென்னை விமான நிலையம் வந்த நடிகர் மம்மூட்டியிடம், விஜய்யின் அரசியல் நுழைவு மற்றும் அவரது தற்போதைய நகர்வுகள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
செய்தியாளர்களின் கேள்விக்குச் சற்றும் யோசிக்காமல், “எதுவும் தெரியாது” என ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட்டு மம்மூட்டி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
பொதுவாகப் பொதுவெளியில் அரசியல் கருத்துக்களைப் பகிர்வதில் கவனமாக இருக்கும் மம்மூட்டி, விஜய்யின் அரசியல் வளர்ச்சியைத் தவிர்க்க விரும்பினாரா அல்லது தமிழக அரசியல் சூழலில் தலையிட விரும்பவில்லையா என நெட்டிசன்கள் மத்தியில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.




