Welcome to Jettamil

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பைத் தாக்க முயன்ற நபரின் பகீர் பின்னணி!

Share

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பைத் தாக்க முயன்ற நபரின் பகீர் பின்னணி!

வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்க விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கைது செய்யப்பட்ட 31 வயது கோல் டோமஸ் ஆலன் பற்றிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் பட்டமும், கணினி அறிவியலில் முதுநிலைப் பட்டமும் பெற்ற இவர், ஒரு சிறந்த மென்பொருள் உருவாக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளாகக் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஆலன், 2024-ஆம் ஆண்டு “சிறந்த ஆசிரியர்” விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“அவர் வகுப்பில் முதல் வரிசையில் அமரும் மிகச் சிறந்த மாணவர்” என அவரது பேராசிரியர்கள் வியப்புத் தெரிவிக்கின்றனர்.

ஒரு காலத்தில் முதியோருக்கான சக்கர நாற்காலிகளில் நவீன பிரேக் முறையைக் கண்டுபிடித்ததற்காகப் பாராட்டப்பட்ட இந்த இளம் விஞ்ஞானி, இப்போது நவீன ஆயுதங்களுடன் ஜனாதிபதியைத் தாக்க முயன்றது ஏன் என FBI தீவிரமாக விசாரித்து வருகிறது.

குறிப்பாக, ஜனநாயகக் கட்சிக்கு நன்கொடை வழங்கிய இவரது அரசியல் நிலைப்பாடு மற்றும் அவர் உருவாக்கி வந்த போர் தொடர்பான கணினி விளையாட்டுகள் இத்தாக்குதலுக்குத் தூண்டுகோலாக இருந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை