ஈரான் தலைவர்களை நேருக்கு நேர் சந்திக்கத் தயார்! – ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடி அறைகூவல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இரண்டு வார கால போர் நிறுத்தம் வரும் புதன்கிழமை மாலை முடிவுக்கு வரவுள்ள நிலையில், ஒரு பெரிய திருப்புமுனையை எட்ட முடியும் என்றால் ஈரானியத் தலைவர்களைச் சந்திக்கத் தமக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள சமாதானப் பேச்சுவார்த்தைகளைப் புறக்கணிப்பதாக ஈரான் விடுத்த அச்சுறுத்தல்களை நிராகரித்துள்ள அவர், ஈரானியத் தரப்பு தீவிரமான பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“யாரும் இங்கே விளையாடவில்லை” என எச்சரித்துள்ள ட்ரம்ப், சமாதானத்தை நிலைநாட்ட ஈரான் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்காவின் விசேட பேச்சுவார்த்தைக் குழுவான துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஏற்கனவே பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
போர் நிறுத்தக் காலம் முடிவதற்குள் ஏதேனும் ஒரு இராஜதந்திரத் தீர்வை எட்ட வேண்டும் என்பதில் அமெரிக்கா தற்போது தீவிரமாக உள்ளது.




