Welcome to Jettamil

ஈரானை விட்டு வெளியேறாது செறிவூட்டப்பட்ட யுரேனியம் – ட்ரம்பின் அறிவிப்பிற்கு ஈரான் கொடுத்த பலத்த அடி

Share

ஈரானை விட்டு வெளியேறாது செறிவூட்டப்பட்ட யுரேனியம் – ட்ரம்பின் அறிவிப்பிற்கு ஈரான் கொடுத்த பலத்த அடி

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எக்காரணம் கொண்டும் நாட்டை விட்டு வெளியேற்றப்படாது என ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

“யுரேனியத்தை அமெரிக்காவிற்கு மாற்றுவது என்பது எங்களது பேச்சுவார்த்தை அட்டவணையிலேயே இல்லை” என அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மேலும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானிய மண்ணைப் போலவே தங்களுக்குப் புனிதமானது என்றும், அதனை அகற்றும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுவது உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரிமை கோரியிருந்த நிலையில், அதற்குப் பதிலடியாகவே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

இதன் மூலம், ஒப்பந்தம் எட்டப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் கூறி வரும் தகவல்களுக்கும் ஈரானின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கும் இடையே பாரிய முரண்பாடு நிலவுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வார இறுதியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு முன்னதாக வெளியாகியுள்ள இந்த அறிக்கை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை