Welcome to Jettamil

ரஷ்ய எண்ணெய்க்கு அமெரிக்கா வழங்கிய சலுகைக் காலம்! மே 16 வரை தடையின்றி இறக்குமதி செய்யலாம்

Share

ரஷ்ய எண்ணெய்க்கு அமெரிக்கா வழங்கிய சலுகைக் காலம்! மே 16 வரை தடையின்றி இறக்குமதி செய்யலாம்

கடல் மார்க்கமாகக் கொண்டு செல்லப்படும் ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலியத் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு, ட்ரம்ப் நிர்வாகம் மேலும் ஒரு மாத காலத்திற்குச் சலுகைக் காலத்தை நீட்டித்துள்ளது.

அமெரிக்கத் திறைசேரி திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, மே மாதம் 16-ஆம் தேதி வரை ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்ய எண்ணெய்க்கான தற்காலிகப் பொருளாதாரத் தடை விலக்கை இனிமேல் நீட்டிக்கப்போவதில்லை என கடந்த புதன்கிழமை அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்தத் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரினால் உலகளாவிய எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகள், மாற்று விநியோகச் சங்கிலி சீராகும் வரை கால அவகாசம் வழங்குமாறு வாஷிங்டனிடம் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்தே ஜனாதிபதி ட்ரம்ப் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை