ஹோர்முஸ் நீரிணை திறப்பு! – மீறினால் கடும் பதிலடி கொடுக்கப்படும் – ஈரானிய புரட்சிகரக் காவல் படை அறிவிப்பு!
இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து, ஜனாதிபதி ட்ரம்ப் முழுமையான முற்றுகை குறித்து எச்சரித்துள்ள நிலையில், ஈரானியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சர்வதேச சட்டங்களுக்கு இணங்க, சிவிலியன் மற்றும் வணிகக் கப்பல்களின் “தீங்கற்ற போக்குவரத்திற்காக” (Harmless passage) ஹோர்முஸ் நீரிணை திறந்திருக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது உலக நாடுகளின் எரிசக்தி சந்தைக்கு ஓரளவிற்கு நிம்மதியை அளித்துள்ளது.
இருப்பினும், ராணுவக் கப்பல்களுக்கு ஈரான் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நீரிணையை நெருங்கும் ராணுவக் கப்பல்கள் அனைத்தும் போர்நிறுத்தத்தை மீறும் செயலாகக் கருதப்படும் என்றும், அத்தகைய கப்பல்கள் மீது மிகக் கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் IRGC எச்சரித்துள்ளது.




