Welcome to Jettamil

சீமான் – கயல்விழி தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதாகத் தகவல்!

Share

சீமான் – கயல்விழி தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதாகத் தகவல்!

தமிழ் சினிமாவில் பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, தம்பி, வாழ்த்துக்கள் உள்ளிட்ட பல வெற்றிகரமான படங்களை இயக்கியவர் சீமான்.

தனது சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் இமயங்கள் பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அவர், தற்போது ‘நாம் தமிழர் கட்சி’ என்ற அரசியல் பேரியக்கத்தைத் தொடங்கி முழுநேர அரசியல் தலைவராகத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு கயல்விழி அம்மாளைத் திருமணம் செய்து கொண்ட சீமானுக்கு, ஏற்கனவே ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், சீமான் அவர்களின் குடும்பத்தில் ஒரு உன்னதமான மகிழ்ச்சியான செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து, உலகெங்கும் உள்ள நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை