இஸ்ரேலிய வீரர்களால் உடைக்கப்பட்ட சிலைக்குப் பதில் புதிய சிலை – இத்தாலிய அமைதிப்படை அதிரடி
தெற்கு லெபனானில் உள்ள ஒரு கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த இயேசு கிறிஸ்துவின் திருவுருவச் சிலையை, இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் தாக்கிச் சேதப்படுத்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அங்கு கடமையில் உள்ள இத்தாலிய அமைதிப்படை வீரர்கள், சேதமடைந்த சிலைக்குப் பதிலாகப் புதிய இயேசு கிறிஸ்துவின் சிலையை அங்கு நிறுவி, அப்பகுதி மக்களின் மனங்களை வென்றுள்ளனர்.
மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் இத்தாலிய வீரர்கள் மேற்கொண்ட இந்தச் செயல் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகின்றது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேலிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது.




