பலத்த எதிர்பார்ப்பில் தமிழக தேர்தல் முடிவுகள் : விஜய்க்கு எதிராக கிளம்பும் புதிய சர்ச்சை
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து முடிவுகளுக்காக அனைவரும் காத்திருக்கும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகப் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது கட்சியின் நிறங்கள் பூசப்பட்ட உயிருள்ள புறாக்கள் பறக்கவிடப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து விலங்கு நல அமைப்பான பீட்டா, விஜய்க்கு நேரடியாகக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. உயிருள்ள பறவைகள் மீது இவ்வாறு செயற்கை இரசாயனச் சாயங்களைப் பூசுவது கடும் கண்டனத்திற்குரியது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“புறாக்கள் மீது சாயம் பூசுவது அவற்றின் இறக்கைகள் மற்றும் தோலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், அவற்றின் உயிருக்கே ஆபத்தாக முடியும்; இது விலங்கு சித்திரவதை சட்டத்தின் கீழ் வரும் குற்றமாகும்” என பீட்டா எச்சரித்துள்ளது.
எதிர்காலத்தில் இது போன்ற செயல்களைத் தவிர்க்கத் தொண்டர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அக்கட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




