தொடருந்து விபத்து தொடர்பில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியதாக ஒருவர் கைது
வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே 12 பயணிகள் காயமடைவதற்குக் காரணமான தொடருந்து விபத்துத் தளத்தில், தண்டவாளத்தின் ஆணிகளைக் கழற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இந்த நபர், கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் எனத் தெரியவந்துள்ளது.
பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில், தண்டவாளத்தில் இருந்து கழற்றப்பட்ட இரும்பு ஆணிகளை, ஒரு குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டு சென்று மறைத்து வைத்த நபர் இவரே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரும் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்காகப் பேலியகொட பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





