Welcome to Jettamil

கனடாவில் புதிய குடியுரிமைச் சட்டம் அமல்! அமெரிக்கர்களிடையே நிலவும் கடும் போட்டி

canada

Share

கனடாவில் புதிய குடியுரிமைச் சட்டம் அமல்! அமெரிக்கர்களிடையே நிலவும் கடும் போட்டி

கனடாவில் வம்சாவளி அடிப்படையிலான புதிய குடியுரிமைச் சட்ட மசோதாவான ‘Bill C-3’ மன்னர் சார்லஸின் ஒப்புதலுடன் நடைமுறைக்கு வந்துள்ளது.

2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தினால் வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்களின் பிள்ளைகளுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டு வந்த நிலையில், அந்தச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என ஒன்ராறியோ நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, இழந்த கனேடியர்கள் (Lost Canadians) என்று அழைக்கப்படும் லட்சக்கணக்கான மக்கள் இப்போது மீண்டும் கனேடியக் குடிமகனாகத் தகுதி பெற்றுள்ளனர்.

புதிய சட்ட மாற்றத்தின்படி, கனேடிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தங்களது முன்னோர்களின் குடியுரிமை ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் எத்தனை தலைமுறைகள் கடந்திருந்தாலும் குடியுரிமை பெற முடியும்.

இதனால் குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் லட்சக்கணக்கான கனேடிய வம்சாவளியினர், இரட்டைக் குடியுரிமை (Dual Citizenship) கோரி விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர்.

கடந்த சில வாரங்களில் அமெரிக்காவிலிருந்து வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாகக் கனேடிய குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை