Welcome to Jettamil

இன்று முதல் PayPal இலங்கையில் அறிமுகம் – உலகளாவிய வர்த்தகத்திற்குத் திறக்கப்பட்ட புதிய கதவு!

Share

இன்று முதல் PayPal இலங்கையில் அறிமுகம் – உலகளாவிய வர்த்தகத்திற்குத் திறக்கப்பட்ட புதிய கதவு!

டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைக்கும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (மே 15, 2026) முதல் இலங்கையில் முழுமையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கையிலுள்ள பயனர்கள் இனி சர்வதேச அளவில் பணத்தைச் செலுத்துவது மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்து வரும் கொடுப்பனவுகளையும் நேரடியாகத் தங்களது உள்ளூர் வங்கிக் கணக்குகளில் பெற்றுக்கொள்ள முடியும்.

வங்கியினால் வழங்கப்பட்ட Debit அல்லது Credit அட்டைகளை இதனுடன் இணைப்பதன் மூலம் மிக எளிதாகப் பணப்பரிமாற்றங்களை முன்னெடுக்கலாம்.

குறிப்பாக, இணையத்தளங்களுக்குத் தமது வங்கி அட்டை இலக்கங்களை வழங்க வேண்டிய அவசியம் இனி இல்லை.

ஒரு மின்னஞ்சல் முகவரி மூலமே பாதுகாப்பாகப் பணத்தைச் செலுத்த முடியும் என்பதால் சைபர் தாக்குதல்களில் இருந்து இது பெரும் பாதுகாப்பை அளிக்கிறது.

மேலும், கணக்கைப் பராமரிப்பதற்கு மாதாந்தக் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்பது ஒன்லைன் பயனர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாகும். ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் பல்கலைக்கழகக் கட்டணங்களைச் செலுத்துவோருக்கு இது மிகப்பெரிய வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை