Welcome to Jettamil

இன்று முதல் 12 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

Share

12 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இன்று (23) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதாவது, பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலையை 40 ரூபாவினால் குறைத்துள்ளது. அதன் புதிய விலை 180 ரூபாவாகும். அத்துடன், பொன்னி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 194 ரூபாவாகும்.

உருளைக்கிழங்கு (இறக்குமதி) கிலோவொன்றின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 280 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.சில அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது.

லங்கா சதொச ஊடாக குறித்த அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் அறிக்கையொன்றின் மூலம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை