Welcome to Jettamil

மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பு!

Share

மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, மாதத்திற்கு 180 அலகுகளுக்கு (Units) மேல் பயன்படுத்தும் வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு மட்டுமே 18 சதவீதக் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஆனால், 180 அலகுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு இந்தக் கட்டண அதிகரிப்பு எவ்விதத்திலும் பொருந்தாது என ஆணைக்குழுத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மின் உற்பத்திச் செலவு அதிகரித்ததால் ஏற்பட்டுள்ள 38 பில்லியன் ரூபாய் பற்றாக்குறையை ஈடுகட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் சலுகையை வழங்க முன்வந்துள்ளதால், நாட்டின் மொத்த நுகர்வோரில் வெறும் 5 சதவீதமானோருக்கு மட்டுமே இந்த விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும். மீதமுள்ள 95 சதவீத நுகர்வோருக்குக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை