Welcome to Jettamil

தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

Share

தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வரலாறு, கலாச்சாரம் மற்றும் தலைமுறை தலைமுறையாக நீடித்து வரும் மக்கள் உறவுகள் மூலம் இலங்கையும் தமிழகமும் பிணைக்கப்பட்டுள்ளன” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையும் இந்தியாவும் நெருக்கமான உறவுகளைக் கட்டியெழுப்பி வருவதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலம் மகத்தான பொருளாதார வாய்ப்புகளைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“வலுவான இந்தியா-இலங்கை கூட்டாண்மைக்குள், தமிழகத்துடன் இணைந்து பெரும் செழிப்பையும் முன்னேற்றத்தையும் நோக்கிப் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழக மக்களுக்கும் முதல்வர் விஜய்க்கும் இலங்கை மக்கள் சார்பாகத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை