Welcome to Jettamil

போதைக்காகத் தாயின் கால்களை உடைத்த மகன்! – 5,000 ரூபாய்க்காகப் பெற்ற தாய் என்றும் பாராமல் வெறிச்செயல்!

Share

போதைக்காகத் தாயின் கால்களை உடைத்த மகன்! – 5,000 ரூபாய்க்காகப் பெற்ற தாய் என்றும் பாராமல் வெறிச்செயல்!

கேகாலை – தேவலகம பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவன், கடந்த 26-ஆம் திகதி போதைப்பொருள் வாங்குவதற்காகத் தனது தாயிடம் 5,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.

தன்னிடம் பணம் இல்லை என்று தாய் கூறியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன், அங்கிருந்த தடியால் தனது தாயின் இரு கால்களையும் சரமாரியாகத் தாக்கியுள்ளான்.

இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் 46 வயதான அந்தத் தாயின் இரு கால்களும் முறிந்துள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வலியால் துடித்த அந்தத் தாயை அக்கம் பக்கத்தினர் மீட்டு கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், மகனின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாக அவர் இதற்கு முன்னரும் பணம் கொடுத்து வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தின் பின்னர் தப்பியோடித் தலைமறைவாகியுள்ள அந்த 20 வயது இளைஞனைப் பிடிக்க தேவலகம பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை