Welcome to Jettamil

மது குடிக்க 1000 ரூபாய் தராததால் தாயைக் கொ*ன்ற மகன் – 19 வயது இளைஞன் மட்டக்களப்பில் கைது

Share

மது குடிக்க 1000 ரூபாய் தராததால் தாயைக் கொ*ன்ற மகன் – 19 வயது இளைஞன் மட்டக்களப்பில் கைது

மட்டக்களப்பு – சித்தாண்டி 4-ஆம் பிரிவில் நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மதுபானம் அருந்துவதற்காகத் தனது தாயாரிடம் 1000 ரூபாய் பணம் கேட்டுள்ளார் 19 வயதான மகன்.

தன்னிடம் பணம் இல்லை எனத் தாய் கூறியதால் ஆத்திரமடைந்த மகன், அவரைப் பிடித்துக் கீழே தள்ளியுள்ளார். இதில் நிலத்தில் தலையடிபட்டு விழுந்த 42 வயதான குமாரசாமி வசந்தா என்ற தாய், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பழைய சந்தை வீதியைச் சேர்ந்த குறித்த இளைஞனைச் சந்திவெளி பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

போ*தைப்பொருள் மற்றும் மதுப் பழக்கத்தினால் இளைஞர்கள் சீரழிந்து வருவதும், அதனால் பெற்றோரையே கொலை செய்யும் அளவிற்குத் துணிவதும் இப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த தாயாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளைச் சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source : IBC

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை