Welcome to Jettamil

பாதுகாப்பு என்பது ஒரு சாக்குப்போக்கே! – இஸ்ரேலைச் சாடிய துருக்கி வெளியுறவு அமைச்சர்

Share

பாதுகாப்பு என்பது ஒரு சாக்குப்போக்கே! – இஸ்ரேலைச் சாடிய துருக்கி வெளியுறவு அமைச்சர்

அன்டலியா இராஜதந்திர மாநாட்டில் (Antalya Diplomacy Forum) உரையாற்றிய துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான் (Hakan Fidan), இஸ்ரேலை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.

“இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காகப் போரிடவில்லை, மாறாக மேலதிக நிலங்களைக் கைப்பற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. நெதன்யாகு அரசாங்கம் நில ஆக்கிரமிப்பிற்குப் ‘பாதுகாப்பு’ என்பதை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்துகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

லெபனானுடன் போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ள போதிலும், தெற்கு லெபனானில் தாங்கள் கைப்பற்றிய நிலைகளை விட்டு வெளியேறப்போவதில்லை என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ள நிலையில், துருக்கியின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பை இராணுவ ரீதியாகவோ அல்லது இராஜதந்திர ரீதியாகவோ நிராயுதபாணியாக்கும் வரை லெபனானில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் ஓயாது என காட்ஸ் மீண்டும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை