சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
அது, சிங்கப்பூர் அணியை 63க்கு 53 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தது.
ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெல்வது இது ஆறாவது தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.