சினிமாவுக்கு வரும் முன் பேருந்தில் கண்டக்டராகப் பணிபுரிந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடையாள அட்டை இணையத்தில் வைரல்!
சினிமா பின்னணி எதுவுமின்றி, தனது அசாத்திய உழைப்பாலும் ஸ்டைலாலும் இன்று இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் ரஜினிகாந்த், ஆரம்பத்தில் கர்நாடகாவில் பேருந்து நடத்துனராகப் (Bus Conductor) பணிபுரிந்தார் என்பது நாம் அறிந்ததே.
‘சிவாஜிராவ் கெய்க்வாட்’ என்ற இயற்பெயருடன் அவர் பெங்களூரில் பஸ் கண்டக்டராகக் கடமையாற்றிய போது, அவருக்கு வழங்கப்பட்ட போக்குவரத்துக்கழகத்தின் உத்தியோகபூர்வ ஐடி கார்டின் அரிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்தின் நடிப்பில் அண்மையில் வெளியான ‘கூலி’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யாமல் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், அடுத்ததாக செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைக் கொண்டாட ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளமும் தயாராகி வருகிறது.
தலைவர் 173, தலைவர் 174 என அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கும் சூப்பர்ஸ்டாரின் இந்த பழைய அடையாள அட்டை, “முறையான உழைப்பும் திறமையும் இருந்தால் எளிய மனிதனும் சரித்திரம் படைக்கலாம்” என்பதற்குச் சான்றாக இருப்பதாகக் கூறி ரசிகர்கள் இதனை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.






