Welcome to Jettamil

தையிட்டியில் சொந்தக் காணிக்குள் நுழைய உரிமையாளர்களுக்குத் தடை? பொலிஸாருடன் மக்கள் கடும் தர்க்கம்

Share

தையிட்டியில் சொந்தக் காணிக்குள் நுழைய உரிமையாளர்களுக்குத் தடை? பொலிஸாருடன் மக்கள் கடும் தர்க்கம்

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் காணி உறுதிகளைக் கொண்டுள்ள 17 பேரின் காணிகளை இன்று (28) அளவீடு செய்வதற்காக மாவட்டச் செயலாளர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதன்படி காணி உரிமையாளர்கள் அங்கு சென்றபோது, பலாலி பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி கடும் சோதனைகளை முன்னெடுத்தனர்.

அடையாள அட்டைகளைப் பதிவு செய்த பின்னரே அனுமதிப்போம் என்றும், பட்டியலில் பெயர் உள்ளவர்களை மாத்திரமே உள்ளே விடுவோம் என்றும் பொலிஸார் நிபந்தனை விதித்ததால் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் தர்க்கம் ஏற்பட்டது.

“எமது காணிகளை அடையாளம் காட்டவே நாம் வந்தோம்; எதற்குப் பொலிஸ் கெடுபிடிகளைச் சந்திக்க வேண்டும்?” என உரிமையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும், தென்னிலங்கையில் இருந்து வந்த பிக்குகள் மற்றும் நபர்கள் எந்தவிதப் பதிவுகளுமின்றி உள்ளே அனுமதிக்கப்பட்ட நிலையில், காணி உரிமையாளர்களுக்கு மட்டும் ஏன் இந்தத் தடை என அவர்கள் ஆவேசமாக வினவினர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை