Welcome to Jettamil

அம்பலாந்தோட்டையில் தலை துண்டித்துச் சிலையில் வைக்கப்பட்ட கொடூரம்!

Share

அம்பலாந்தோட்டையில் தலை துண்டித்துச் சிலையில் வைக்கப்பட்ட கொடூரம்!

நேற்று அதிகாலை (13.05.2026) அம்பலாந்தோட்டை, போகுடுயாய பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த மூன்று பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல், அங்கிருந்த 34 வயதுடைய நபர் ஒருவரை இலக்கு வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதலைத் தடுக்க முயன்ற உயிரிழந்தவரின் மாமனார் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொ*லையாளிகளின் வெறிச்செயலில் தாக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொலையாளிகள் அத்துடன் நிற்காமல், உயிரிழந்தவரின் தலையைத் துண்டித்து எடுத்துச் சென்று, மாமடல சந்தியில் உள்ள ஒரு சிலைக்கு அடியில் வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைக் கண்ட பொதுமக்கள் உறைந்து போயுள்ளனர். உயிரிழந்தவர் 3 பிள்ளைகளின் தந்தை என்பது அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடந்ததா என்ற கோணத்தில் போலீசாரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை