Welcome to Jettamil

முச்சக்கர வண்டிக் கட்டணம் அதிரடி உயர்வு! இன்று முதல் புதிய கட்டண முறைகள் அமல்

Share

முச்சக்கர வண்டிக் கட்டணம் அதிரடி உயர்வு! இன்று முதல் புதிய கட்டண முறைகள் அமல்

இலங்கையில் இன்று (23.03.2026) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டிக் கட்டணங்களை அதிகரிப்பதற்குப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி, முதல் ஒரு கிலோமீற்றருக்கான ஆரம்பக் கட்டணம் 100 ரூபாவிலிருந்து 110 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் ஒவ்வொரு மேலதிக கிலோமீற்றருக்கும் தலா 90 ரூபா அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு முச்சக்கர வண்டி சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அதிகார சபை 10 ரூபாவினால் மாத்திரமே அதிகரிப்பை மேற்கொண்டுள்ளது.

இன்று முதல் முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பொதுமக்கள் இந்தப் புதிய கட்டண முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை